சங்ககிரி அருகே லாரி டிரைவர் தற்கொலை
சங்ககிரி அருகே லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
சங்ககிரி:
சங்ககிரி அருகே மஞ்சக்கல்பட்டி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). லாரி டிரைவர். இவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு பிருந்தா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேஜாஸ்ரீ, யுவதிகா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கார்த்திகேயனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவருடைய மனைவி பிருந்தா கோபித்துகொண்டு தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த கார்த்திகேயன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.