கருங்கல் கடத்தி வந்த லாரி பறிமுதல்

திருக்கோவிலூர் அருகே கருங்கல் கடத்தி வந்த லாரி பறிமுதல்

Update: 2023-02-14 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சந்தப்பேட்டை புறவழிச்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது கர்நாடக மாநில பதிவெண் கொண்ட லாரியில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையில் இருந்து 3 யூனிட் அளவு எடை கொண்ட கருங்கற்களை பெங்களூருவுக்கு கடத்தி செல்ல இருந்தது தொியவந்தது. இதையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல்செய்து போலீஸ் நிலையத்தில் கொண்டு நிறுத்தி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட மண்டல பறக்கும் படை உதவி புவியியலர் அருள்முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்