மின்கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்

திருப்பத்தூரில் மின்கட்டணம் செலுத்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-10-06 18:56 GMT

திருப்பத்தூரில் மின்கட்டணம் செலுத்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீண்ட வரிசை

திருப்பத்தூரில் இருந்து ஜலகாம்பாறை செல்லும் வழியில் திருப்பத்தூர் துனை மின்நிலையம் உள்ளது. திருப்பத்தூர் நகர பகுதிக்குட்பட்ட மக்கள் இந்த அலுவலகத்தில் தான் மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர். இங்கு மின்கட்டணம் செலுத்துவதற்கு 2 கவுண்ட்டர்கள் செயல்பட்டு வந்தது. இதனால் மின்கட்டணம் செலுத்த செல்லும் பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் நின்று மின்கட்டணத்தை செலுத்தி விட்டு ரசீது பெற்று சென்றனர்.

இந்தநிலையில் சில நாட்களாக மின்கட்டணம் செலுதச்துவதற்கு ஒரே ஒரு கவுண்ட்டர் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் மின்கட்டணம் செலுத்த செல்லும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் மின்கட்டணம் செலுத்த செல்லும் முதியவர்களும், பெண்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே மின்கட்டணத்தை விரைந்து செலுத்துவதற்கு வசதியாக ஏற்கனவே இருந்ததை போன்று 2 கவுண்ட்டர்களைகளை செயல்பட வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்லைனில்...

இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்ட போது, ரூ.2 ஆயிரத்துக்கு மேல் மின்கட்டணம் ஆன்லைன் மூலம் கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் மின்கட்டணம் செலுத்துவதற்கு இங்கு வருகின்றனர். இதனால் தான் கூட்டம் அதிகமாக உள்ளது. ரூ.2 ஆயிரத்துக்கு மேல் மின்கட்டணம் கட்ட வருபவர்களை குறைக்கும் வகையில் ஒரு கவுண்ட்டர் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது. அதனால்தான் ஒரு கவுண்ட்டர் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இதனால் பொதுமக்கள் ஆன்லைனில் பணம் செலுத்த முன்வரவேண்டும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்