மக்கள் நீதிமன்றம்

அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது.

Update: 2023-08-12 17:54 GMT

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது.

அரக்கோணம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.அருந்ததி தலைமை தாங்கினார்.மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.ஷாகிரா பானு, வக்கீல் வீரராகவன் முன்னிலை வகித்தனர்.

மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 21 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.25 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டது.

மேலும் பல ஆண்டு காலமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரித்து வாழ்ந்த 2 தம்பதிகள் சமரசத்தின் மூலம் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் வக்கீல்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்