ஊராட்சி மன்ற தலைவி, அலுவலர்களை அலுவலகத்தில் வைத்து பூட்டிய வார்டு உறுப்பினர்கள்

பெரும்பாலையில் ஊராட்சி மன்ற தலைவி, அலுவலர்களை அலுவலகத்தில் வைத்து வார்டு உறுப்பினர்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-07-29 16:26 GMT

ஏரியூர்:

ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலை ஊராட்சி மன்ற தலைவராக கஸ்தூரி. இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஏரியூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, கள ஆய்வாளர் சசிதரன் ஆகியோர் விரைந்து வந்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் முருகன் வார்டு உறுப்பினர்களை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் வார்டு உறுப்பினர்கள் அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடத்துவதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து அலுவலர்கள் வெளியே விட்டனர். இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்