கோவில்பட்டி பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
கோவில்பட்டி பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெருமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்தல் மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை
கோவில்பட்டி உப மின் நிலையத்திலிருந்து மின் வினிேயாகம் பெறும் கிருஷ்ணா நகர், அஸ்வின் நகர், நிலா நகர், லாயல் மில் காலனி, ஸ்டேட் பேங் காலனி, வள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளுக்கும், விஜயபுரம் உப மின்நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் கிழவிபட்டி, செண்பகப் பேரி, வடக்கு திட்டங்குளம், லிங்கம்பட்டி ரோடு, காமநாயக்கன்பட்டி, எட்டு நாயக்கன்பட்டி, முடுக்களங்குளம், சால் நாயக்கன்பட்டி, கொப்பம்பட்டி, தீத்தாம்பட்டி, குருவிநத்தம், வேப்பங்குளம் ஆகிய பகுதிகளுக்கும், பசுவந்தனை உப மின்நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பவர் கிரிட் மின் தொடருக்கும் மின்தடை செய்யப்படும்.
மேலம் எப்போது வென்றான் உப மின் நிலையத்திலிருந்துமின் வினியோகம் பெறும் அருங்குளம், நீராவி புதுப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், கே. குமரெட்டியாபுரம் ஆகிய பகுதிகளுக்கும், எம். துரைச்சாமிபுரம் உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் இ.சத்திரப் பட்டி, அகிலாண்டபுரம் ஆகிய பகுதிகளுக்கும், எட்டையாபுரம் உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் எட்டையாபுரம் டவுன் பகுதிகளுக்கும். கழுகுமலை உப மின்நிலையத்திலிருந்துமின் வினியோகம் பெறும் சி. ஆர். காலனி, கரடிகுளம் ஆகிய பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.