சேமிப்பு கிடங்கு அமையவுள்ள இடத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

சேமிப்பு கிடங்கு அமையவுள்ள இடத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.;

Update: 2022-10-14 19:04 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் ஊராட்சி மாங்குப்பம் கிராமத்தில் 2021-22-ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வெங்கடாபுரம் சாலையோரம் 5 ஏக்கரில் தானிய சேமிப்புக் கிடங்கு, உலர்களம் ஆகியவை அமையவுள்ளது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.சம்பத் நேற்று வருவாய், வேளாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கிய அவர் பணிகள் தொடங்குவதற்கு வசதியாக இப்பகுதியில் உள்ள அரசு நிலங்களை யாரேனும் ஆக்கிரமித்து இருந்தால் அதை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் இணைந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின் போது சோளிங்கர் தாசில்தார் கணேசன், காவேரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டாயுதபாணி, ஊராட்சி மன்றத் தலைவர் அர்ஜுனன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்