வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளஆக்கிரமிப்புகள் அகற்றம்

கொள்ளிடம் அருகே வெள்ளமணல் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2023-04-25 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே வெள்ளமணல் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சியை சேர்ந்த கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள வெள்ளமனல் கிராமத்தில் சீர்காழி வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காடு உள்ளது. இந்த இடத்தை அப்பகுதியில் உள்ள சிலர் ஆக்கிரமிப்பு செய்து வேலியிட்டு பயிர் சாகுபடி செய்து வந்தனர். கடந்த ஜனவரி மாதம் 4-ந் தேதி வனக்காப்பாளர் மற்றும் வனக் காவலர்கள் அப்பகுதியில் சாகுபடி செய்த பருத்தி செடிகளை அழித்தனர். இதைத் தொடர்ந்து மீண்டும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வேலியிட்டு அடைத்து இருந்தனர்.இதனால் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி அன்று மீண்டும் வனக்காப்பாளர்கள், காவலர்கள் நேரில் சென்று ஆக்கிரமிக்கப்பட்ட வேலிகளை அகற்றினர். அப்போது அப்பகுதியில் உள்ள சிலர் வந்து வனக்காப்பாளரை தாக்கி இரு சக்கர வாகனத்தை கீழே தள்ளி செல்போனை பிடுங்கி தரையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனக்காப்பாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகற்றம்

இந்நிலையில் வெள்ளமணல் காப்பு காட்டு பகுதியில் மீண்டும் சிலர் முள்வேலி மற்றும் கம்பி வேலியிட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பயிர் சாகுபடி செய்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப்டேனியல் தலைமையில் 12 பேர் கொண்ட வனப் பணியாளர்கள் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று முள்வேலி மற்றும் கம்பி வேலி ஆகியவற்றை அகற்றி இ்டத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டனர். மேலும் அங்கிருந்த 2 மண்வெட்டி, கடப்பாரை, அரிவாள் மற்றும் ஒரு பிளாஸ்டிக் குழாய் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்