சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை துவக்கம்: 30 நிமிட இடைவேளையில் ரெயில்கள் இயக்கம் - ரெயில்வே நிர்வாகம்
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள் சேவை நேற்று முதல் பாதிக்கப்பட்டிருந்தது..
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள் சேவை நேற்று முதல் பாதிக்கப்பட்டது. தற்போது புயல் கரையை கடந்த நிலையில் சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள் இன்று குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள் சேவை இன்று மதியம் 2 மணி முதல் தொடங்கியுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. புறநகர் மின்சார ரெயில்கள் நாளை 30 நிமிட இடைவேளையில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூர் - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நாளை 30 நிமிட இடைவேளையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும். அதேபோல், சென்னை கடற்கரை - திருவள்ளூர் - அரக்கோணம் இடையே நாளை 30 நிமிட இடைவேளையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும். வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையே நாளை 30 நிமிட இடைவேளையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.
மேலும், திருவொற்றியூர் - கும்மிடிப்பூண்டி இடையே நாளை 1 மணிநேர இடைவேளையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.