மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு ரூ.10 லட்சம் கடன்
கடையநல்லூர் அருகே மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே கொடிக்குறிச்சி ஊராட்சியில் மகளிர் திட்டம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மகளிர் சுயஉதவிக்குழு வாழ்வாதார கடனுக்கான காசோலையை தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் பகவதியப்பன் தலைமை தாங்கினார். கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் டி.திருமதி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத்தலைவர் பேச்சிமுத்து, நகர்மன்ற உறுப்பினர் முருகன், கொடிக்குறிச்சி கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.