இந்த ஆண்டு ரூ.9 கோடி கூடுதலாக பயிர் கடன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.9 கோடி கூடுதலாக பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று இணை பதிவாளர் தெரிவித்தார்.;
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.9 கோடி கூடுதலாக பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று இணை பதிவாளர் தெரிவித்தார்.
மீன் வளர்ப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் இதுவரை 2206 விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ.10 கோடியே 27 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.
இது சென்ற ஆண்டை காட்டிலும் ரூ.9 கோடி கூடுதலாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் அனைத்து பயனாளிகளும் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களும் பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
தகவல்
இந்த தகவலை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் எஸ்.மனோகரன் தெரிவித்துள்ளார்.