சாலையில் மீன் லோடு ஏற்றியமினி லாரி கவிழ்ந்தது:போக்குவரத்து பாதிப்பு

விளாத்திகுளம் அருகேசாலையில் மீன் லோடு ஏற்றிய மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-01-20 18:45 GMT

விளாத்திகுளம்:

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதி விவேகானந்தர் நகரை சேர்ந்த நாகராஜ் மகன் விஜய முருகன் (வயது (27). இவர் நேற்று மாலையில் ராமேஸ்வரத்திலிருந்து மினி லாரியில் மீன் லோடு ஏற்றிக் கொண்டு கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் விளாத்திகுளம்-சூரங்குடி சாலையில் உள்ள அரியநாயகிபுரம் கிராமம் அருகே திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி நிலைதடுமாறி சாலையின் நடுவில் கவிழ்ந்தது. இதில் விஜயமுருகன் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் வாகனத்தில் சிக்கி இருந்த விஜயமுருகனை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையின் மையத்தில் வேன் கிடந்தால் விளாத்திகுளம்-சூரங்குடி சாலையில் மாலை 5.55 மணிமுதல் இரவு 7.30 மணி வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு அனைத்து வாகனங்களும் அணிவகுத்து காத்திருந்தன. பின்னர் விளாத்திகுளம் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் வேனை பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்