ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்
செண்பகராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இட்டமொழி:
நாங்குநேரி யூனியனில் முதன்முறையாக செண்பகராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செண்பகராமநல்லூர் பஞ்சாயத்து தலைவர் முருகம்மாள் சிவன்பாண்டியன் தலைமை தாங்கினார். நாங்குநேரி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பர்வதராணி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மாலா ஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பொ.செல்வராஜ், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர் பயிற்றுனர் டேனியல் முத்தையா, அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் பாக்கியவதி, எஸ்தர், முன்னாள் ஆசிரியர் கோபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியர் ரூபன் இமானுவேல்ராஜ் நன்றி கூறினார்.