சீனாபுரம் சந்தையில் விர்ஜின் கறவை மாடு ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை
சீனாபுரம் சந்தையில் விர்ஜின் கறவை மாடு ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனையானது.;
பெருந்துறை
சீனாபுரம் சந்தையில் விர்ஜின் கறவை மாடு ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனையானது.
விர்ஜின் கறவை மாடு
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் மாட்டு சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு சேலம் மாவட்டம் முத்தநாய்க்கன்பட்டி, தா்மபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் மோர்ப்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 75-ம், இதே இன கிடாரி கன்றுகள் 40-ம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடுகள் 25-ம், இதே வகை கிடாரி கன்றுகள் 150-ம் விற்பனைக்கு வந்திருந்தன.
சந்தையில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையில் விற்றது.
விலை போகவில்லை
சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடு ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரையிலும், இதே வகை கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் விற்றது.
மொத்தம் ரூ.30 லட்சத்துக்கு மாடுகளும், கன்றுகளும் விற்பனையானது.
வியாபாரிகள் குறித்த விலைக்கு மாடுகள் விலை போகவில்லை. கொண்டுவரப்பட்ட மாடுகளில் பாதி மாடுகள் மட்டுமே விற்பனையானது. இதனால் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் அந்தியூர் சந்தைகளுக்கு மாடுகளை விற்க கொண்டுசென்றார்கள்.