புயலின் நகரும் வேகம் அதிகரிப்பு: மாமல்லபுரத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் 'மாண்டஸ்' புயல்...!

Update:2022-12-09 14:54 IST
Live Updates - Page 2
2022-12-09 10:45 GMT

6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



2022-12-09 10:45 GMT

4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

விழுப்புரம், கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வேலூர், திருப்பூர்,கோவை, நீலகிரி,தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

2022-12-09 10:44 GMT

அரசு அறிவுறுத்தியும் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் மக்கள்...!

சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 210 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது!

கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும் மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்ட நிலையிலும் மாமல்லபுரம் கடற்கரையில் ஆபத்தை உணராமல் மக்கள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். 

2022-12-09 10:40 GMT

கடலூர்: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டஸ் புயல் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டு உள்ளது.

2022-12-09 10:19 GMT

மாண்டஸ் புயலின் வெறியாட்டம்.. சாலைகளை விழுங்கிய கடல்



2022-12-09 10:18 GMT

மாண்டஸ் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மாண்டஸ் புயல் காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர்  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


2022-12-09 09:59 GMT

எண்ணூரில் கடலரிப்பு

மண்டஸ் புயலின் கோரத்தாண்டவ அலையின் ஆக்ரோஷமான சிற்றத்தால் எண்ணூரில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.திருவொற்றியூர், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது!

2022-12-09 09:45 GMT

நெருங்கும் ’மாண்டஸ்’புயல்...! காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் முக்கிய தகவல்



2022-12-09 09:44 GMT

மரண பயம் காட்டும் ’மாண்டஸ்’



2022-12-09 09:32 GMT

27 விமான சேவைகள் ரத்து

மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன‌. இந்த நிலையில் இன்று பிற்பகல் இருந்து இரவு வரையில் 27 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்