மோதல்... முற்றுகை... ரத்தகாயம்...! ஒற்றை தலைமை விவகாரத்தில் போர்க்களமான அ.தி.மு.க அலுவலகம்
அதிமுகவில் இருக்கக்கூடிய 75 மாவட்ட செயலாளர்களில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 60க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்ததாகவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு 11 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை ஏற்க ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்
* தீர்மான குழு கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றார்.
சென்னை, அதிமுக அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு அதிமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமையின் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என நெய்வேலியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருள்மொழித்தேவன் பேசினார்
அ.தி.மு.க அலுவலகத்திற்கு உள்ளே களேபரம்... வெளியே முத்தம் - கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்த செல்லூர் ராஜூ
சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் தீர்மான குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
* தீர்மானக் குழு கூட்டத்தில் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை
* தனது ஆதரவாளர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் தனியாக ஆலோசனை நடத்திய நிலையில் தீர்மானக் குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மீது தாக்குதல்
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயக்குமாருடன் வந்த பெரம்பூர் நிர்வாகி மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் தனியாக ஆலோசனை
* ஒரு பக்கம் தீர்மான குழு ஆலோசனை நடைபெறுகிறது.
* மற்றொரு பக்கம் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
* ஓ. பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.