மோதல்... முற்றுகை... ரத்தகாயம்...! ஒற்றை தலைமை விவகாரத்தில் போர்க்களமான அ.தி.மு.க அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம் வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
* எடப்பாடி பழனிசாமியை இல்லத்தில் சந்தித்த நிலையில் செல்லூர் ராஜூ அதிமுக அலுவலகம் வருகை தந்துள்ளார்.
* தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
"அதிமுகவில் அறுவை சிகிச்சை.. எடப்பாடி மனதில் இருப்பது இதுதான்?" - வெளியான புதிய தகவல்
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை குரல் ஓங்கியுள்ள நிலையில், கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
* தொண்டர்கள் ஆரவாரத்துத்துடன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
* ‘கழகத்தின் காவலரே, ஒற்றை தலைமையே’ என்ற கோஷத்துடன் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர்.
ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகம் செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
கிரீன்வேஸ் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதன்படி முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர், முக்கூர் சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மோகன், பி.வி.ரமணா உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை அலுவலகம் புறப்பட்டார்
* இல்லத்தின் முன் ஆதரவாளர்கள் குவிந்திருந்தநிலையில், தற்போது தலைமை அலுவலகம் செல்கிறார்
*ஆதரவு மாவட்ட செயலாளர்களை அதிமுக தலைமை அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் 3வது நாள் தீர்மானக் குழு கூட்டம் தொடங்கியது
* பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று இறுதி ஆலோசனை நடைபெறுகிறது.
* பொதுக்குழு தீர்மானம் இன்று இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது.
அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தால், பரபரப்பாக மாறிய கிரீன்வேஸ் சாலை ஓ.பன்னீர் செலவம் இல்லம் முன்பு அதிக அளவில் திரளும் அ.தி.மு.க. தொண்டர்கள் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ , முக்கூர் சுப்பிரமணியம் எடப்பாடி இல்லம் வருகை தந்து உள்ளனர்.
ஒற்றை தலைமை தீர்மானம் குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கலந்து ஆலோசித்தால் சுமூக முடிவு எட்ட வாய்ப்பு. சென்னை, அதிமுக அலுவலகத்திற்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் இன்று வருகை தர வாய்ப்பு உள்ளது - வைகைச் செல்வன்
எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருகை
சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து 5-வது நாளாக தன்னுடைய ஆதரவாளர்கள் சையதுகான், பால கங்காதரன், மனோஜ் பாண்டியன், ரவிச்சந்திரன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அதுபோல சேலத்தில் இருந்து சென்னை வந்துள்ள நிலையில் செல்லூர் ராஜு, தங்கமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருகைதந்து உள்ளார்.