திமுக எம்.பி., என்.ஆர்.இளங்கோவனுடன், 4 வழக்கறிஞர்கள் மருத்துவமனைக்கு வருகை
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு திமுக வழக்கறிஞர்கள் வருகை தந்துள்ளனர். செந்தில்பாலாஜியை விசாரிக்க நீதிபதி வர இருப்பதால் திமுக வழக்கறிஞர்கள் ஓமந்தூரார் மருத்துவமனை வருகை தந்துள்ளனர்.
மருத்துவமனைக்கு விரையும் நீதிபதி?
அமைச்சர் செந்தில்பாலாஜியை ரிமாண்ட் செய்ய அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லியை, ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் அழைத்துச்செல்ல திட்டமிட்டுள்ளனர்.
நீதிபதி சக்திவேல் விலகிய நிலையில் புதிய அமர்வு அமைப்பு
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதற்காக, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை அமர்வில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகிய நிலையில் புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க இருந்த நீதிபதி திடீர் விலகல்
செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க இருந்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சக்திவேல் திடீரென விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவை விசாரிக்க ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஒப்புதல் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் நீதிபதி விலகியதால் வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிடப்படும் என்றும், நடைமுறையை பின்பற்றி புதிய அமர்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். இன்றே விசாரிப்பதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் முயற்சிகள் எடுக்கப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடுகளுக்கு சீல்
சென்னை, அபிராமிபுரத்தில் உள்ள கோகுல்ராஜ்க்கு சொந்தமான 2 வீடுகளுக்கு வருமானவரி துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
செந்தில் பாலாஜியை பரிசோதிக்கும் இஎஸ்ஐ டாக்டர்கள்...!
செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய தமிழக அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரைத்த நிலையில் இஎஸ்ஐ டாக்டர்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியை பரிசோதனை நடத்தினர். அப்போது செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய இஎஸ்ஐ மருத்துவர்களும் பரிந்துரை செய்தனர்.
செந்தில் பாலாஜியை சந்தித்த மனைவி மேகலா
சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை மனைவி மேகலா சந்தித்தார். மருத்துவமனையில் இருந்து விசாரணைக்காக நீதிமன்றம் புறப்பட்டார் மேகலா. செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால்
அமலாக்கத்துறை, சிபிஐ சோதனை மூலமாக நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளை பெறலாம் என நினைப்பது முட்டாள் தனமானது என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையில் தாமதம் - நோயாளிகள் புகார்
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் தாமதம் என நோயாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர். பேட்டரி வாகனங்களும் முறையாக இயக்கப்படவில்லை என ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகள் புகார் அளித்துள்ளனர். காலை 8 மணிக்கு வந்ததும் பல மணி நேரம் கழித்தே டாக்டர்களை பார்க்க முடிந்ததாக நோயாளிகள் புகார் அளித்துள்ளனர்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு விரைந்த சபரீசன்
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் சபரீசன்