ஓசூரில் தெருநாய்கள் கடித்து சிறுமி படுகாயம்

Update: 2023-06-20 19:45 GMT

ஓசூர்

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது காயத். இவர், ஓசூர் அண்ணா நகரில் குடும்பத்தினருடன் தங்கி சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவரது மகள் ரோகாயா காதுன் (வயது 6) தாலுகா அலுவலக சாலையில் உள்ள கடைக்கு சென்றாள். அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் கூட்டம் சிறுமியை துரத்தி, துரத்தி கடித்தன. இதில் அந்த சிறுமி படுகாயமடைந்தாள். இதனையடுத்து ெபற்றோர் சிறுமியை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெரு நாய்கள் தொல்லையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்