உக்கிரமாகாளியம்மன் கோவிலில் குட்டி குடித்தல் நிகழ்ச்சி

உக்கிரமாகாளியம்மன் கோவிலில் குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-08-13 19:32 GMT

திருச்சி தென்னூரில் உள்ள உக்கிரமாகாளியம்மன் கோவிலில் ஆடி மாதம் 28-ந் தேதியையொட்டி கிடா வெட்டும் பூஜை, குட்டி குடித்தல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இந்த விழாவையொட்டி காலையில் மகா சக்தி சூலத்திற்கு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் மருளாளி 50-க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்தார். இதன் தொடர்ச்சியாக ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் மதியம் அன்னதானம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்