நாசரேத்:
நாசரேத் வள்ளுவர் வாசகர் வட்டம் சார்பில் நாசரேத் பொது நூலகத்தில் இலக்கிய மன்ற கூட்டம் நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் வள்ளுவர் வாசகர் வட்ட தலைவர் அருள்ராஜ், ஓய்வு பெற்ற தாசில்தார் அய்யாகுட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பேச்சாளராக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதியின் நேர்முக உதவியாளர் கவிஞர் ராஜ பிரபா 'உறவு என்னும் உயிர் நாடி' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.
கூட்டத்தில் எழுத்தாளர் ஆறுமுகப்பெருமாள், ஓய்வு பெற்ற ஆடிட்டர் கொம்பையா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நூலகர் பொன் ராதா செய்து இருந்தார்.