புதிய பாரத திட்டத்தில் கற்போருக்கு எழுத்தறிவு தேர்வு

கொள்ளிடம் ஒன்றியத்தில் புதிய பாரத திட்டத்தில் கற்போருக்கு எழுத்தறிவு தேர்வு நடந்தது

Update: 2023-03-19 19:00 GMT

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்கள் அடிப்படை எழுத்தறிவை தெரிந்து கொள்ள வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஒன்றியத்தில் 38 மையங்களில் சுமார் 780 கற்போர்கள் இதில் பயின்று வருகின்றனர். இவர்களின் கற்றலை மதிப்பிடும் வகையில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது. தேர்விற்கு முதன்மை கண்காணிப்பாளராக தலைமை ஆசிரியரும் அறை கண்காணிப்பாளராக தன்னார்வலர்களும் செயல்பட்டனர். தேர்வு நடைபெற்ற மையங்களை வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, ஆசிரியர் பயிற்றுநர்கள் பாக்கியலட்சுமி, ஐசக், ஞானராஜ், கவிதா, ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி கூறுகையில், கொள்ளிடம் ஒன்றியத்தில் 38 மையங்களிலும் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மிக சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. முழுவதும் எழுதப் படிக்க தெரியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தமிழ் மற்றும் கணிதத்தில் அடிப்படை, ஏ.டி.எம் பயன்படுத்தும் முறை, வங்கியில் பணம் எடுக்கும் முறை ஆகியவைகள் சிறப்பான முறையில் கற்றுத் தரப்பட்டது. மேலும் அவர்களின் கற்றல் அளவினை தெரிந்து கொள்ளும் வகையில் இன்று தேர்வு நடைபெற்றது. இதில் கற்போர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

Tags:    

மேலும் செய்திகள்