எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை வட்டார கல்வி அலுவலர்கள் அசோகன், சாந்திராணி ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். ஊர்வலம் பள்ளியில் தொடங்கி அணை குடம் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்து இறுதியில் பள்ளியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில்் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்கள் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் சேர்ந்து பயன் பெற வேண்டும் என விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். ஊர்வலத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.