எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி
எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி;
வால்பாறை
வால்பாறையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அடிப்படை கல்வியறிவு வழங்குவது, இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். பேரணியில் உண்டு உறைவிட பள்ளி மாணவ-மாணவிகள், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு வீதி வீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். இதனை தலைமை ஆசிரியர்கள் சிவன் ராஜ், ராபின்சன் தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜாராம், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.