கும்மிடிப்பூண்டி அருகே பொதுமக்களுக்கு இடையூறான மதுக்கடையை மூட வேண்டும்; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பொதுமக்கள் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி அருகே பொதுமக்களுக்கு இடையூறான மதுக்கடையை மூட பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2023-09-05 13:38 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ள தேர்வழி ஊராட்சி சார்பில் அதன் தலைவர் கிரிஜா குமார் தலைமையில் கிராம மக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது.

தேர்வழி ஊராட்சியில் உள்ள தேர்வழி கிராமத்தில் அரசு மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இதன் அருகில் சுமார் 100 மீட்டருக்குள் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. மதுக்கடையில் மது பாட்டில்களை வாங்கி கொண்டு வரும் நபர்கள் அரசு பள்ளி வளாகத்தின் அருகே அமர்ந்து மது குடித்தவாறு மாணவ, மாணவிகளை கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த மதுபானக்கடை அப்பகுதியில் இருப்பதால் தேர்வழி கிராமத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. ரெட்டம்பேடு சாலை வழியாக இந்த மதுபானக்கடையை கடந்து செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் மட்டும் கடந்த சில மாதங்களில் 5-க்கும் மேற்பட்டோர்கள் உயிர் இழந்து உள்ளனர்.

இதனால் மதுபானக்கடையை மூட வேண்டும் என கிராம மக்கள் சார்பாக கோரிக்கையை முன்வைக்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்