சுதந்திர தினத்தன்று நீலகிரியில் இன்று மதுக்கடைகள் மூடல்கலெக்டர் உத்தரவு
சுதந்திர தினத்தன்று நீலகிரியில் இன்று மதுக்கடைகள் மூடல் கலெக்டர் உத்தரவு
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு மதுபான விதிகள், 1981, 1989 ஆகியவற்றின்படி, டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல், பார்கள் ஆகியவற்றில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ஏதும் திறந்திருப்பதாக பொது மக்களுக்கு தகவல் தெரியும்பட்சத்தில் அது குறித்த விவரத்தை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் 0423-2234211, மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு 0423- 2223802 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.