மன்னார்குடியில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்

பங்குனி பெருவிழாவை முன்னிட்டு மன்னார்குடியில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்;

Update:2023-03-22 00:15 IST


திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

மன்னார்குடி தாலுகா ராஜகோபாலசாமி திருக்கோவிலில் நடைபெறும் பங்குனிப்பெருவிழாவை முன்னிட்டு 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெட்டுங்குதிரை மண்டகப்படி மற்றும் 27-ந் தேதி (திங்கட்கிழமை) திருத்தேர் சுவாமி வீதியுலா ஆகியவை நடக்கிறது. இதையொட்டி மன்னார்குடி நகரப்பகுதிகளில் செயல்படும் 9606, 9607, 9610, 9605, 9725, 9613 மற்றும் 9860 ஆகிய டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனை சார்ந்துள்ள மதுக்கூடங்களையும் 26, 27-ந்தேதி ஆகிய 2 நாட்களுக்கு முழுவதுமாக மூட வேண்டும். 9854 மற்றும் 9616 ஆகிய 2 மதுபானக்கடைகள் மற்றும் அதனை சார்ந்து செயல்படும் மதுக்கூடங்களை 26-ந்தேதி மதியம் 2 மணி முதல் மூட வேண்டும். மேற்கண்ட உத்தரவை செயல்படுத்த தவறும் பட்சத்தில், தொடர்புடைய மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் மதுகூடங்களின் ஏலதாரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்