பெட்டிக்கடையில் மதுவிற்றவர் கைது
ஒரத்தநாடு அருகே பெட்டிக்கடையில் மதுவிற்றவர் கைது செய்யப்பட்டார்.;
ஒரத்தநாடு;
ஒரத்தநாடு பகுதியில் பெட்டிக்கடையில் மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரத்தநாட்டை அடுத்துள்ள பின்னையூர் கீழக்கோட்டையில் பெட்டிக்கடையில் மதுபாட்டில் விற்பனை செய்த பாஸ்கர் (வயது50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.