மதுபானம் விற்றவர் கைது

கூடலூரில் மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-04-30 18:45 GMT

கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 3-வது வார்டு பேச்சியம்மன் கோவில் தெரு பகுதியில் கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவரிடம் 19 மதுபாட்டில்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்த கதிரேசன் (வயது 49) என்பதும், அரசு மதுபான கடைகளில் மதுபாட்டில்களை மொத்தமாக விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்