கரூர் மாவட்டம், லாலாபேட்டை போலீசார் லாலாபேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ஜெகன் (என்கிற) முத்துராமலிங்கம் தாளியாம்பட்டி நான்கு ரோடு அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.