என்.ஜி.ஓ.காலனியில்மது விற்றவர் கைது
என்.ஜி.ஓ.காலனியில்மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
மேலகிருஷ்ணன்புதூர்:
சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் என்.ஜி.ஓ.காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் வடக்குகுண்டலை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 36) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.