சாராயம் விற்றவர் கைது
மணல்மேடு அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்ப்ட்டார்;
மணல்மேடு:
மணல்மேடு அருகே உள்ள மன்னிப்பள்ளம் பகுதியில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மன்னிப்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகில் சேத்தூரை சேர்ந்த ராஜேந்திரன்( வயது 55) என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த 45 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.