சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

Update: 2023-02-06 18:45 GMT

வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை கிராமத்தில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தேத்தாகுடி தெற்கு தைக்கால் காலனியை ேசர்ந்த முகமதுஅப்துல்நாசர் (வயது40) என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அப்துல்நாசரை கைது செய்து அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய நெய்விளக்கு பகுதியை சேர்ந்த முருககனி என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்