மதுபானம் விற்றவர் கைது

போடியில் மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-27 18:45 GMT

போடி தாலுகா போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரிடம் 15 மது பாட்டில்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மேலசொக்கநாதபுரம் காந்திஜி காலனியை சேர்ந்த முத்து மாணிக்கம் (வயது 35) என்பதும், மது விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்