அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் அழகியபாண்டியபுரத்தை அடுத்துள்ள கேசவன்புதூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனையிட்ட போது மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் பள்ளத்தெருவை சேர்ந்த பாக்கியமணி (வயது49) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.