நாகர்கோவில்,
நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று மீனாட்சிபுரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குறுந்தெருவை சேர்ந்த கதிரேசன் (வயது45) என்பதும், மதுபாட்டில்கள் விற்றதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கதிரேசனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.