மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த பாஸ்கர்(வயது 43) என்பவர், பாப்பாக்குடி அருகே மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம் 12 குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் ரூ.2,200-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.