மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-09-08 19:01 GMT

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கீழநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ நத்தம் பஸ் நிறுத்தம் அருகே மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்கு சென்று போலீசார் கண்காணித்தனர். அப்போது அப்பகுதியில் மது விற்ற கீழ நத்தம் கீழத்தெருவை சேர்ந்த செந்தில் (வயது47) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்