மது விற்றவர் கைது

திண்டுக்கல் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-03 19:15 GMT

திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் பொன்மாந்துறை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி (வயது 70) என்பதும், விற்பனைக்காக மது பாட்டில்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்