வள்ளியூர்:
வள்ளியூர் போலீசார் கேசவனேரி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நின்ற ஒருவரை பிடித்து அவர் வைத்திருந்த சாக்குப்பையை சோதனையிட்டனர். அதில் 40 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் தளவாய்புரத்தை சேர்ந்த குமார் (வயது 49) எனவும், டாஸ்மாக் கடையில் இருந்து மதுப்பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குமாரை போலீசார் கைது செய்தனர்.