மது விற்றவர் கைது

முத்துப்பேட்டை அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்;

Update: 2023-08-08 18:45 GMT

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி கால்நடை ஆஸ்பத்திரி அருகே சிலர் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பநாதன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி (வயது 45) என்பவர் அரசு மதுபானங்களை வாங்கி வந்து அனுமதியின்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பக்கிரிசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்