மது விற்ற 6 பேர் கைது

தஞ்சையில் பல்வேறு இடங்களில் மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-09-03 20:34 GMT

தஞ்சாவூர்;

தஞ்சையை அடுத்த மருங்குளம் பகுதியில் மது விற்பனை நடப்பதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மருங்குளம் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தஞ்சை வடக்குவாசலை சேர்ந்த சரவணன் (வயது 57) என்பதும், மது விற்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 96 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.10 ஆயிரத்து 150 மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.இதேபோல் தஞ்சை மதுவிலக்கு போலீசார் நாஞ்சிக்கோட்டை பைபாஸ் சாலை, மாரனேரி, நடுக்காவேரி, பூச்சந்தை, தற்காலிக பஸ்நிலையம் ஆகிய பகுதியில் சோதனை நடத்தினர். இதில் அந்த பகுதிகளில் மது விற்ற 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்