குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

பாபநாசத்தில் குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-01-06 18:45 GMT


தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பண்டாரவாடை அருகே உள்ள கோவில் தேவராயன்பேட்டை பெரியார்நகரை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் பிரபு (வயது35). சாராய வியாபாரி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரையின்பேரில் கும்பகோணம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து பிரபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பிரபுவை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்