வீட்டின் பின்புறம் பதுக்கிய மதுபாட்டில்கள் பறிமுதல்; பெண் கைது

வீட்டின் பின்புறம் பதுக்கிய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-24 21:56 GMT

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஸ்ரீபுரந்தான் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மதியழகனின் மனைவி ஈஸ்வரி (வயது 50) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்