கலங்கரை விளக்கம் தின விழா

கோடியக்கரையில் கலங்கரை விளக்கம் தின விழா கொடிேயற்றி கொண்டாடப்பட்டது;

Update: 2022-09-21 18:45 GMT

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் கோடியக்கரையில் ஆங்கிலேயர் காலத்தில் 1890-ம் ஆண்டு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் மற்றும் 1998-ம் ஆண்டு திறக்கப்பட்ட மற்றொரு கலங்கரை விளக்கம் என 2 கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 21-ந் தேதி கலங்கரை விளக்கதினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று கோடிக்கரை கலங்கரை விளக்க வளாகத்தில் தேசியக்கொடி மற்றும் கலங்கரை விளக்க கொடியை கலங்கரை விளக்கம்(பொறுப்பு) தலைமை அதிகாரி பழனிச்சாமி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்