கொடைக்கானலில் சாரல் மழை

கொடைக்கானலில் சாரல் மழை பெய்தது.

Update: 2023-09-15 19:30 GMT

கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக இயல்பான சூழ்நிலை காணப்பட்டது. அதன்படி நேற்றும் பகலில் லேசான வெப்பம் நிலவியது. அதனை தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் சாரல் மழை பெய்தது. சில மணி நேரம் நீடித்த இந்த மழை மாலை வரை விட்டு, விட்டு பெய்தது. அத்துடன் வானில் திரண்ட கருமேக கூட்டங்களும் தரையிறங்கி மலைகளை மறைத்தன.

இருப்பினும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பலர் சாரல் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை பார்வையிட்டு ரசித்தனர். கொடைக்கானலில் தற்போது குளிரான காலநிலை நிலவுவதால் 2-வது சீசனை அனுபவிப்பதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்