கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.;

Update: 2023-06-30 09:58 GMT

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 53). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (57) என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது. கடந்த 18.2.2019 அன்று அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பரசுராமனை, பன்னீர்செல்வம் கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து ஐஸ் அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை 17-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, பன்னீர்செல்வம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

Tags:    

மேலும் செய்திகள்