பெண்ணை அடித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

மானூர் அருகே பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-07-31 19:05 GMT

மானூர் அருகே பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பெண் அடித்துக் கொலை

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கீழப்பிள்ளையார்குளம் குறிச்சி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி பார்வதி (வயது 45).

இவரது குடும்பத்திற்கும், அந்த பகுதியை சேர்ந்த காளியப்பன் (40) என்பவர் குடும்பத்திற்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி காளியப்பன் மற்றும் அதே ஊரை சேர்ந்த கணேசன் (37), கணபதி (70), பாலமுரளி கிருஷ்ணன் (38) ஆகிய 4 பேரும் சேர்ந்து பார்வதியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தனர். இதுதொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு நெல்லை மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி விஜயகுமார் வழக்கை விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட காளியப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் கணேசனுக்கு 6 மாதம் சிறை தண்டனை ரூ.11 ஆயிரம் அபராதமும், கணபதிக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் பாலமுரளி கிருஷ்ணன் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அபராத தொகையில் இருந்து ரூ.25 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்