சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு ஆயுள் தண்டனை -மதுரை கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2023-02-13 21:09 GMT


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பாலியல் ெதாந்தரவு

மதுரை மாவட்டம் சமயநல்லூரை அடுத்த ஊர்மெச்சிகுளத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 48). இவர் கடந்த 2019-ம் ஆண்டு இதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இது சம்பந்தமான புகாரின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் பாஸ்கரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கு விசாரணை அதிகாரியான சமயநல்லூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய், தலைமை காவலர் கவிதா ஆகியோரை மதுரை மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்