நூலகம் திறப்பு விழா

நூலகம் திறப்பு விழா நடந்தது.

Update: 2023-01-19 21:04 GMT

அம்பை:

அம்பை நகராட்சி கோவில்குளம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் புதிய நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. நகராட்சி தலைவர் கே.கே.சி.பிரபாகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார். முன்னாள் அரிமா சங்க ஆளுநர் சுதந்திர லட்சுமி வரவேற்றார். நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி கலந்து கொண்டு, நூலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி துணை தலைவர் சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், கவுன்சிலர் அனுசுயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்